/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் டைரி :ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தகராறு
/
போலீஸ் டைரி :ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தகராறு
ADDED : நவ 08, 2025 11:42 PM
தாராபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார், 29, மனோஜ்குமார், 26. இவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனை முன், ஆம்புலன்ஸ் நிறுத்தி ஓட்டி வந்தனர். இவர்களுக்கும், மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர்களான ரிஸ்வான், சையது அபுதாகீர் உள்ளிட்ட சிலருடன், நோயாளி ஒருவரை அழைத்து செல்வது தொடர்பாக வாடகை பேசியதில் பிரச்னை ஏற்பட்டது. அதில், மூன்று பேரும் சேர்ந்து, இருவரை தாக்கினர். காயமடைந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், தாராபுரம் போலீசார், மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
டைமிங் பிரச்னை; நடத்துனர் மோதல்
தாராபுரம், அலங்கியத்தை சேர்ந்தவர் ஆசிக், 30, அன்பரசு, 21. இருவரும் தனியார் பஸ்சில் நடத்துனராக வேலை செய்து வந்தனர். இவர்களுக்குள் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் வரும் வழியில் டைமிங் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் செய்தனர். இருதரப்பு புகாரின் பேரில், இருவர் மீது தாராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
பெண் தற்கொலை
தாராபுரம், தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் ஹரி தரணி, 26. இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

