சிறுமியிடம் அத்துமீறல்வாலிபர் மீது வழக்கு
ஊத்துக்குளியை சேர்ந்த, 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அருகே உள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அடிக்கடி தந்தையின் நண்பரான அபாஸ்கான், 35 என்பவர் வீட்டுக்கு வந்து செல்வார். சமீபத்தில், 15 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க அபாஸ்கான் பெற்றோரிடம் கேட்டார். அதற்கு பெற்றோர் மறுத்து விட்டு, வீட்டுக்கு வர வேண்டாம் என கூறினார். சில நாட்களுக்கு முன், மீண்டும் வந்த அவர், வெளியில் நின்றிருந்த சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், அபாஸ்கான் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலியல் தொந்தரவுமுதியவர் கைது
திருப்பூரை சேர்ந்த பனியன் தொழிலாளி தம்பதி. இவர்களுக்கு, ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த செக்யூரிட்டி அமிர்தலிங்கம், 67 என்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்தார். பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து, முதியவரை போலீசார் கைது செய்தனர்.
வேன் மோதி பெண் பலி
திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி, 58. இவர் காங்கயம் ரோடு, முத்தணம்பாளையத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை மருமகன் தனசேகர், லட்சுமியை டூவீலரை அழைத்து கொண்டு ஆத்துப்பாளையத்தில் வீட்டில் விட அழைத்து சென்றார்.
வளம் பாலம் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே டூவீலர் சென்ற போது, பின்னால் மாடுகளை ஏற்றி வந்த வேன் முந்தி செல்ல முயன்று, டூவீலர் மீது மோதியது.
அதில், லட்சுமி வேனின் பின் சக்கரத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டத்தில் இருந்து மாடுகளை, கறி கடையில் மாடுகளை இறக்கி விட வேனை ஓட்டி வந்த டிரைவர் முருகேசனிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.