sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : பிப் 28, 2024 11:54 PM

Google News

ADDED : பிப் 28, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண் தற்கொலை


காங்கயத்தை சேர்ந்தவர் சுமதி, 50. ராஜேந்திரன் என்பவருடன் முத்தணம்பாளையத்தில் வசித்து வந்தார். பெண்களுக்கு சுய உதவி குழு மூலமாக கடன் வாங்கி தந்தார். கடன் வாங்கியவர்களிடம் வாங்கி கட்ட முடியாமல், கடன் அதிகமானது. மனமுடைந்த சுமதி, காமநாயக்கன்பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி தற்கொலை


பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சத்ருகன்குமார், 24; வெள்ளகோவிலில் நுால் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார். தனது குடும்பத்தினரை பிரிந்து இருக்கின்றேனே என்ற ஏக்கத்தில் இருந்தார். நேற்று முன்தினம் மில் வளாகத்தில் தங்கி இருக்கும் அறையில் துாக்குமாட்டி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆண் சடலம் மீட்பு


திருப்பூர், வீரபாண்டி, கல்லாங்காட்டில் உள்ள பாறைக்குழி தண்ணீரில், 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று விசாரித்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us