தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : மார் 20, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விவசாயி பரிதாப பலி


திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 80; விவசாயி. இவருக்கு பெருந்தொழுவு கவுண்டம்பாளையம் அருகே விவசாய நிலம் உள்ளது. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள புற்களுக்குத் தீ வைத்துள்ளார். அவரைச் சுற்றிலும் தீ பரவியது. அதிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. தான் வைத்த தீயிலேயே உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமியிடம் அத்துமீறியவர்


காங்கயத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி; தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் செந்தில்குமார், 20 என்பவர் ஆசை வார்த்தை கூறி, அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், செந்தில்குமார் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், மார்ச் 20-

ஈரோடு, மொடக்குறிச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம், 50 என்பவரிடம், கடந்த, ஐந்து ஆண்டுகளாக, வெள்ளகோவிலை சேர்ந்த உமா ரமணன், 29; டிரைவராக வேலை செய்து வந்தார்.

அதே பஸ்சில், வள்ளியரசலை சேர்ந்த கோபால், 42 என்பவர் நடத்துனராக பணியாற்றி வந்தார். திடீரென உமா ரமணனை வேலையை விட்டு நிறுத்தினார். தொடர்ந்து, கோபாலும் வேலைக்கு செல்லாமல் நின்று விட்டார்.

ஆத்திரமடைந்த சிவப்பிரகாஷம் உமா ரமணனை தொடர்பு கொண்டு மொபைல் போனில் மிரட்டினார்.

புகாரின் பேரில், பஸ் உரிமையாளர் சிவப்பிரகாசம் மீது, பி.சி.ஆர்., கீழ் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us