வாலிபருக்கு, 25 ஆயிரம் அபராதம்
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரை விசாரித்தனர். அவர் ஒடிசாவை சேர்ந்த பாரத்குமார், 27 என்பதும், குட்கா வைத்திருந்ததும் தெரிந்ததும். அவரை கைது செய்த போலீசார், 5.5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள், அந்த வாலிபருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மது விற்ற இருவர் கைது
காங்கயம், தாராபுரம் ரோடு, வெள்ளரப்பாறை அருகே போலீசார் வாகன சோதனை செய்தனர். அதில், புதுக்கோட்டையை சேர்ந்த தர்மராஜ், 28 என்பவர் மது பாட்டில் கொண்டு வந்தார். அவரை கைது செய்து, 27 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர். இதேபோல, கரூர் ரோட்டில் மது விற்ற சிவகங்கையை சேர்ந்த பாண்டி, 43 என்பவரை கைது செய்து, 26 பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரை திட்டிய லாரி டிரைவர் கைது
காங்கயம், திருப்பூர் ரோட்டில், போக்குவரத்து போலீசார் கருணாகரன் மற்றும் சத்யா ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டிவைரிடம் உரிய ஆவணங்களை எடுத்து வர கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்து, லாரியை ரோட்டின் குறுக்கே நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தார். இதுதொடர்பாக, டிரைவர் தினேஷ்குமார், 29 என்பவரை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.