தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஏப் 09, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டூவீலர் மோதி விவசாயி பலி


திருப்பூர் மாவட்டம், முத்துார், அத்தான்பாளையம் புதுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 61; விவசாயி. இவர் நேற்று முன்தினம் ராசாத்தாள் வலசுக்கு செல்வதற்காக, அவரது வீட்டில் இருந்து டூவீலரில்சென்றார். காங்கயம் ரோட்டில் சென்ற போது, டூவீலர் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மக்களுக்கு இடையூறு: 4 பேர் கைது


திருப்பூர் மாவட்டம், ஊதியூர் மக்கள் குடியிருப்பு, பஸ் ஸ்டாப், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இடையூறு ஏற்படுத்தும் வகையில் போதை ஆசாமிகள்மது அருந்துவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ரோந்து சென்ற போலீசார், ரோட்டோரம் மது அருந்திய கவுண்டம்பாளையம் காலனியை சேர்ந்த தர்மராஜ், 23, சந்தோஷ், 22, சக்திவேல், 47 மற்றும் சக்திவேல், 45 என, நான்கு பேரை கைது செய்து, மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்ற மூன்று பேர் கைது


திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அதில், உழவர் சந்தை அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த சிலரிடம் விசாரித்தனர். அதில், ஒடிசாவை சேர்ந்த தோலாமணி பரிக், 31, பில்காஸ்தலா, 21, கோவிந்தாஷா, 30 என, இருவரை கைது செய்து, ஒரு கிலோ, 700 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கார் விபத்தில் முதியவர் பலி


கோவை, காந்திபார்க்கை சேர்ந்தவர் அய்யாதுரை, 65. இவரது மனைவி சூர்யகலா, 53. மகன் பிரவீன் நிகேஷ், 29 ஆகியோர் காரில் சேலம் - கோவை பைபாஸ் ரோட்டில் நேற்று முன்தினம்சென்றனர்.

காரை அய்யாதுரை ஓட்டி சென்றார். ஊத்துக்குளி அருகே சாம்ராஜ்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் இறங்கி, சிமென்ட் தொட்டியில் மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அய்யாதுரை இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us