சூதாட்டம்
2 பேர் கைது
கே.ஆர்.பி., தோட்டம் அருகே சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெபஸ்டின், 19 மற்றும் ஆனந்த், 23 ஆகியோரை திருப்பூர் சென்ட்ரல் போலீசார் கைது செய்து, 9 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்ற
2 பேர் சிக்கினர்
கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் அருகே கேரளா லாட்டரி விற்பனை செய்த நரசிம்மன், 63 என்பவரை நல்லுார் போலீசாரும், எஸ்.வி., காலனி டவர் லைன் ரோட்டில் லாட்டரி விற்ற சிவராஜ், 48 என்பவரை வடக்கு போலீசாரும் கைது செய்தனர்.
திருவிழாவில்
கைகலப்பு
தென்னம்பாளையம் சந்தை அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த சிலருக்குள் பிளக்ஸ் பேனர் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.இரு தரப்பை சேர்ந்த, ஐந்து பேரிடம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுபாட்டில்கள்
பறிமுதல்
காங்கயம் சந்தைப்பேட்டையில் மதுவிற்ற புதுக்கோட்டை, கொத்தக்காபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன், 25; காங்கயம், தாராபுரம் ரோடு, வெள்ளரப்பாறையில் மதுவிற்ற தர்மதுரை, 28 ஆகியோரை போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மின்சாரம் தாக்கி
தொழிலாளி பலி
மூலனுார், கரைப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 55. மரம் ஏறும் தொழிலாளி. நேற்று காலை பெரமியத்தில் உள்ள தனியார் ஒருவரின் தோட்டத்தில் தென்னை மரங்களில் தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். தென்னை மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியில், கொக்கி உரசியது. அதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு இறந்தார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

