சேவல் சண்டை; 4 பேர் கைது
காங்கயம், கீரனுாரில் நேற்று முன்தினம் சிலர் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபடுவதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார், தொட்டாம்பட்டியை சேர்ந்த யுவராஜ், 28 உட்பட, நான்கு பேரை கைது செய்து, இரண்டு டூவீலர், நான்கு சேவல்களை பறிமுதல் செய்தனர்.
பீஹார் வாலிபர் பலி
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் மஜ்ஜி, 37. தாராபுரம், நாதம்பாளையத்தில் தங்கி பண்ணையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கு துாங்கி கொண்டிருந்தார். பண்ணைக்கு வந்த லாரியை பின்னால் எடுத்த போது, அவர் மீது ஏறி பரிதாபமாக இறந்தார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்தவர் யார்?
வஞ்சிபாளையம் - சோமனுார் வழித்தடத்தில், நேற்று முன்தினம், நள்ளிரவு, 1:00 மணியளவில், 55 வயது மதிக்கதக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இறந்தவர் யார் என்பது குறித்து, திருப்பூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரயில் பாதையில் நள்ளிரவில் கடக்க முயன்றவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.