தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : மே 24, 2025 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2025 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டக்கல்லுாரி மாணவி தற்கொலை


தாராபுரம், மணக்கடவை சேர்ந்தவர் மித்ரா, 22; கோவை சட்டகல்லுாரியில், நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஏப்.,30ம் தேதி காதலித்து வந்தவருடன் நிச்சயம் முடிந்து, ஜூன் 6ல் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கு பண நெருக்கடி இருந்தது.

இதன் காரணமாக, திருமணத்தை தள்ளி போடலாம் என்று தாயாரிடம் தெரிவித்து வந்தார். மனமுடைந்து இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிமென்ட் சீட் தலையில் விழுந்து பலி


பல்லடம், அறிவொளி நகரை சேர்ந்தவர் முத்து, 55. பழம் வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 20 நாட்களுக்கு முன் கண் அறுவை சிகிச்சை செய்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர், வலையபாளையம் ரோட்டில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டின் முன்பு உள்ள சிமென்ட் சீட்டை கழற்றி, புதியதாக மாற்றும் பணிக்கு முத்துவை அழைத்து சென்றார்.

பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக, 12 அடி உயரத்தில் இருந்து சிமென்ட் சீட் உடைந்து, முத்து தலையில் விழுந்தது. இதில், படுகாயமடைந்த அவர் இறந்தார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us