தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீஸ் டைரி திருப்பூர்

போலீஸ் டைரி திருப்பூர்

போலீஸ் டைரி திருப்பூர்


ADDED : ஜூன் 01, 2025 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 07:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வழிப்பறி செய்த இருவர் கைது


தாராபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உடுமலை ரோடு ஜீவா காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் பெண் உட்பட, இருவரிடம் மொபைல் போனை, இருவர் வழிப்பறி செய்தனர். புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டு தேடினர். காரத்தொழுவை சேர்ந்த மனோஜ், 20 மற்றும், திண்டுக்கல்லை சேர்ந்த, 17 வயது சிறுவன் என, இருவர் ஈடுபட்டது தெரிந்தது. இருவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது தெரிந்தது.

கோவில் உண்டியல் திருட்டு


குண்டடம், வேங்கிபாளையத்தில் மல்லீஸ்வரன் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக தண்டபாணி, 65 என்பவர் உள்ளார். நேற்று காலை கோவிலை திறந்த அவர், வழக்கம் போல் பூஜைகளை முடித்து விட்டு, பக்தர்கள் சாமி கும்பிட வசதியாக திறந்து வைத்து விட்டு சென்றார். பின், திரும்பி வந்து பார்க்கும் போது, கதவு பூட்டப்பட்ட நிலையில், உண்டியல் மாயமானது தெரிந்தது. குண்டடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டட தொழிலாளி பலி


திருப்பூர் - பி.என்., ரோடு, பாண்டியன் நகரை சேர்ந்தவர் பீட்டர், 61, கட்டட தொழிலாளி. நேற்று காலை பாண்டியன் நகரில் இருந்து, பெருமாநல்லுார் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பாரதி நகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில், பீட்டர் அதே இடத்தில் இறந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் துாக்கில் தற்கொலை


கொடுவாய் அருகேயுள்ள தோப்புக்காட்டைச் சேர்ந்தவர் சின்ன வீரன், 75; ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் விரக்தியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

1.25 கிலோ கஞ்சா பறிமுதல்


காங்கயம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் ரோட்டில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அதில், சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த, இருவரை சோதனை செய்தனர். கஞ்சா பொட்டலம் விற்பனைக்காக வைத்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக, பீகாரை சேர்ந்த ராஜீவ் முகியா, 25, பிரகாஷ் முகியா, 19 என, இருவரை கைது செய்தனர். இருவரும் ரயில் வாயிலாக கஞ்சா கடத்தி வந்து, விற்பனை செய்வது தெரிந்தது. இருவரை கைது செய்து, 1.25 கிலோ, 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us