நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
முத்துார், மலையாத்தாபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 35; எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் மாலை காங்கயம் வெள்ளகோவில் ரோட்டில் காடையூரான் வலசு என்ற இடத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ரோட்டோரம் நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
'போக்சோவில்' பெயின்டர் கைது
திருச்சி, அய்யப்பன் நகரை சேர்ந்தவர் நேசராசா, 32. வெள்ளகோவிலில் தங்கி பெயின்டர் வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள, பத்து வயது சிறுமியிடம் அத்துமீறினார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் நேசராசாவை 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.