பைக் மீட்பு செங்கப்பள்ளியை சேர்ந்தவர் தீபன், 28, தொழிலாளி. பெருமாநல்லுார் இவர் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து திருச்செங்கோடு சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திகேயன், 44, என்பவரை கைது செய்து, பைக்கை மீட்டனர்.
வாலிபர் மாயம் தேனி மாவட்டம், காமாட்சிபுரம் குப்பி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 30; டிரைவர். கோவையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கரூரிலிருந்து கோவை நோக்கி சென்றபோது பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்கால் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது அவரை தண்ணீர் இழுத்துச் சென்றது. அவிநாசிலிங்கம்பாளையம் போலீசார், அவரை தேடுகின்றனர்.
இறந்தவர் யார்? பொங்கலுாரிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். அவர் பெயர், ஊர் தெரியவில்லை. இரண்டு மாதங்களாக பொங்கலுார் வட்டாரத்தில் சுற்றி திரிந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா பறிமுதல் சிவன்மலை அடிவாரம் பகுதியில் காங்கயம் போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள பொதுக்கழிப்பிடம் அருகே, நின்றிருந்த மாதேஸ்வரன், 45 என்பவரை சோதனையிட்ட போது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் மாதேஸ்வரன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.