நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வெள்ளகோவில், முத்துார் - மாதவராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 45. மரத்தச்சு வேலை செய்து வருகிறார். இவரது அக்கா முறை மகன்கள் முத்துார், சுப்ரமணியபுரத்தை சேர்ந்த விக்னேஷ், 26, அபிஷேக், 23; மூவரும் முத்துாரில் 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தினர். போதையில், மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
போதையில் இருந்த விக்னேஷ், பீர் பாட்டிலால் மணிகண்டன் தலையில் அடித்து தாக்கினார். மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.