பெண் தற்கொலை
திருப்பூர்; காங்கயம், பாப்பினி வீரம்பாளையத்தை சேர்ந்தவர் காந்திமதி, 46. பத்து ஆண்டுகள் முன், கணவர் இறந்தார். பின், மகனுடன் வசித்து வந்தார். கடந்த, நான்கு மாதங்களாக உடல்நல பிரச்னை காரணமாக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காந்திமதி நேற்று காலை வீட்டின் அருகே உள்ள பி.ஏ.பி., வாய்க்காலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி வீட்டுக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி
திருப்பூர்; பீஹாரை சேர்ந்தவர் சஞ்சீர்குமார், 22; திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று காலை டூவீலரில் படியூர் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த பனியன் நிறுவனத்தின் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சஞ்சீர்குமார் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.