விபத்தில் பெண் பலி திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நாச்சியாம்பாளையத்தை சேர்ந்தவர் குப்பத்தாள், 48. இவரும், தனது இளைய மகன் சங்சீவி ஆகியோர் டூவீலரில் தெக்கலுாரில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தனர். திருப்பூர் ரோட்டில், கார், டூவீலர் மீது மோதியது. படுகாயமடைந்த குப்பத்தாளை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தீக்குளித்து தற்கொலை திருப்பூர், முதலிபாளையம், கெங்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், 46. இவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்த நிலையில் இருந்தார். நேற்று முன்தினம் தனக்கு தானே மண்ணெண்யை ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறி செய்த இருவர் கைது தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் பூவரசன், 21; கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார். வேலை காரணமாக, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அப்போது, பஸ் ஸ்டாண்டில் சிலர் தாக்கி மொபைல் போன், 500 ரூபாயை பறித்து சென்றனர். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட செல்வகுமார், 20, பாலாஜி, 22 என்பது தெரிந்தது. இருவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

