ADDED : மார் 07, 2026 05:42 AM
விபத்தில் ஒருவர் பலி வெள்ளகோவில், செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த வேலன், 79. விவசாய கூலி தொழிலாளி. தன் வீட்டிலிருந்து மொபட்டில் முத்துார் நோக்கிச் சென்றார்.
ஈரோடு ரோடு விவேகானந்தா பள்ளி அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் பலியானார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை பொருள் அழிப்பு திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த சில மாதங்களில், பதிவு செய்யப்பட்ட 61 கஞ்சா வழக்குகளில் தொடர்புடையநபர்களிடமிருந்து, போதை பொருட்களான ஏறத்தாழ 1.5 கோடி மதிப்பிலான, 181 கிலோ கஞ்சா, 118 கிலோ கஞ்சா சாக்லேட்கள் மற்றும் 2.5 கிராம் மெத்தபெட்டமைன்ஆகியன பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தது. உரிய சட்ட விதிகளின் கீழ் அந்த போதை பொருட்கள் நேற்று அழிக்கப்பட்டன.
கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் போலீஸ் கமிஷனர், ராஜேந்திரன் மேற்பார்வையில், துணை கமிஷனர் ராஜராஜன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
