ADDED : ஜூலை 01, 2026 06:28 AM
கஞ்சா சாக்லேட் பறிமுதல்
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், ஒடிசாவை சேர்ந்த சரத் ஜெனா, 23 என்பதும், திண்டுக்கல் அருகே தங்கி வேலை செய்வது தெரிந்தது. அவரிடம் போலீசார் நடத்திய சோதனையில், 2.7 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, பறிமுதல் செய்தனர்.
வலி நிவாரணி மாத்திரை இருவர் கைது
திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். பாரப்பாளையத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது தெரிந்து, இருவரிடம் விசாரித்தனர். அப்பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், 25 மற்றும் ஸ்ரீதர், 25 என்பது தெரிந்தது. இருவரை கைது செய்து, 18 வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
