ADDED : ஆக 24, 2026 09:13 PM
விபத்தில் வாலிபர் பலி
தாராபுரத்தை சேர்ந்த ரித்விக்னேஷ், 21 ஓட்டிச் சென்ற கார், வஞ்சிபாளையம் பிரிவில் டூவீலரில் வந்த விஜய், 29, அருண்குமார், 22 மீது மோதியது. இதில் காயமடைந்த விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்ட்ரிங் தொழிலாளி பலி
முத்துார் அருகே காங்கயம் ரோட்டில் நடந்து சென்ற சென்ட்ரிங் தொழிலாளி முருகேசன், 48 மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
7.5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பூரில் விற்பனைக்காக வைத்திருந்த 7.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர். மங்கலம் பகுதியில் இருவரிடம் 4.5 கிலோவும், கவுண்டநாயக்கன்பாளையம் அருகே ஒருவரிடம் 3 கிலோவும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது ஜூல்பிகர் மண்டேல், 26, ரபிகுல் மண்டேல், 36, மிதிலேஷ் சவுத்ரி, 35 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
