தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : நவ 05, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 09:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகனம் மோதி தொழிலாளி பலி

பல்லடம் அருகேயுள்ள தேவராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 55. தொழிலாளியான இவர், நேற்று (நவ.,4) சாமளாபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அதே வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், நடராஜன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், எதிரே வந்த லாரி மீது மோதியது. பலத்த காயமடைந்த நடராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை திருடிய நபர் கைது

காங்கயம் மஜீத் வீதியைச் சேர்ந்தவர் காளிதாஸ், 35. கடந்த 29ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 8 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றார். காங்கயம் போலீசார் சந்தேக நபர்களின் நடமாட்டம் மற்றும் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், வெள்ளகோவிலைச் சேர்ந்த சதீஷ், 37 திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், 8 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா பதுக்கல்: வாலிபர் கைது

அவிநாசி அடுத்த தெக்கலுாரில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வரும் பீஹாரை சேர்ந்த லலித்குமார், 22. கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த அவிநாசி போலீசார், 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us