UPDATED : நவ 11, 2026 07:57 PM
ADDED : நவ 11, 2026 07:52 PM
சூதாட்டம்: 13 பேர் கைது
மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரோஸ் கார்டன் பகுதியில் பணம் வைத்து வெட்டாட்டம், சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்திய போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்து, ரூ.39 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி தற்கொலை
தாராபுரம் ரங்கபாளையத்தில், பெண் ஒருவரின் வீட்டில் திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த சுரேஷ், 50, என்பவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பெண்ணுடன் பழக்கம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவரை சந்திக்க சென்றுள்ளார். மதுபோதையில் இருந்ததால் வீட்டுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், அப்பெண் வெளியே சென்றுவிட்டு திரும்பியபோது சுரேஷ் இறந்து கிடந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த மயில்: வனத்துறை விசாரணை
தாராபுரம்– காங்கயம் பிரிவு சாலையோரம் இறந்து கிடந்த மயிலை வனத்துறையினர் மீட்டு விசாரித்து வருகின்றனர். தகவலறிந்த காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மயிலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனம் மோதி மயில் இறந்ததா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
அநாகரீக வாலிபர் கைது
வெள்ளகோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 31 வயது இளம்பெண். இவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் பார்த்திபன், 24 என்பவர் கடந்த, 8ம் தேதி இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்தார். இதுகுறித்து பெண்ணின் புகாரின் பேரில், வெள்ளகோவில் போலீசார் பார்த்திபன் மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
