தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


UPDATED : நவ 12, 2026 09:53 PM

ADDED : நவ 12, 2026 09:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 09:53 PM ADDED : நவ 12, 2026 09:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா பதுக்கல்; 3 பேர் கைது

மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடுவாய் டாஸ்மாக் அருகில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, இடுவாய், பாரதிபுரம், அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்த சின்னன், 27; ஹரிபிரசாத், 18; பாரப்பாளையம், திருநகரைச் சேர்ந்த ஜெயந்த், 18, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

டூ வீலர் மோதி விவசாயி பலி

பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி,75. விவசாயி. கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொங்கலூர் அபூர்வா ஹோட்டல் அருகே நடந்து சென்றபோது டூவீலர் மோதியதில் உயிரிழந்தார். பொங்கலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

சூதாட்டம்: 17 கூர்கா கைது

அவிநாசி, ஆட்டையாம்பாளையம் பகுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, எஸ்.ஐ.,கள் அன்பரசன், பத்மாவதி மற்றும் போலீசார் சென்று சோதனையிட்டனர். அதில், கூர்கா ஒருவரின் அறையில், 17 கூர்காக்கள் பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அனைவரையும் கைது செய்த போலீசார், 62 ஆயிரம் ரூபாய், 15 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us