/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களிலும் 'சிசிடிவி' : பல்லடம் போலீஸ் தீவிரம்
/
கிராமங்களிலும் 'சிசிடிவி' : பல்லடம் போலீஸ் தீவிரம்
கிராமங்களிலும் 'சிசிடிவி' : பல்லடம் போலீஸ் தீவிரம்
கிராமங்களிலும் 'சிசிடிவி' : பல்லடம் போலீஸ் தீவிரம்
ADDED : அக் 31, 2025 12:00 AM

பல்லடம்:  பல்லடம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தொழிலாளர்கள் மிக நெருக்கமாக வசிக்கும், புறநகர பகுதிகளில்தான், அதிகப்படியான குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.
குற்ற சம்பவங்களின் போது,  உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதில், 'சிசிடிவி' கேமராக்கள் தான் போலீசாருக்கு உதவிகரமாக உள்ளன.  பாதுகாப்பு நடவடிக்கையாக 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துமாறு, போலீசார், பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
பல்வேறு சம்பவங்களின் போது, கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள  'சிசிடிவி' கேமராக்கள் தான் போலீசாருக்கு உதவி வருகின்றன.  பல்லடம் போலீசார், கிராமப் பகுதிகளிலும் 'சிசிடிவி' கேமராக்களை விரிவுபடுத்தி உள்ளனர். கரைப்புதுார், அருள்புரம்,  ராயர்பாளையம், மகாலட்சுமி நகர், வடுகபாளையம் புதுார், சித்தம்பலம் புதுார், பணிக்கம்பட்டி, சின்னக்கரை, கோடங்கிபாளையம், பருவாய் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட இடங்களில், மொத்தம், 246 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
போலீசார் கூறுகையில், 'நிறுவனங்களில் சமூகப் பொறுப்புணர்வு  நிதியை பயன்படுத்தி, கேமராக்கள் பொருத்தப்பட்டு, கிராமப் பகுதிகளும் கண்காணிப்பில் உள்ளன. விரைவில், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலேயே, கண்காணிப்பு அறையும் உருவாக்கப்பட்டு, ஒட்டுமொத்த 'சிசிடிவி' கேமராக்களின் பதிவும் ஒரே இடத்தில் கண்காணிக்கப்படும்' என்றனர்.

