/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசு அள்ளிய கும்பல் போலீசார் விசாரணை
/
பட்டாசு அள்ளிய கும்பல் போலீசார் விசாரணை
ADDED : நவ 02, 2024 10:57 PM
திருப்பூர்: பணம் தராமல் பட்டாசுகளை அள்ளிச் சென்ற கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் எஸ்.வி., காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 45. தீபாவளி முன்னிட்டு அப்பகுதியில் பட்டாசு கடை வைத்திருந்தார். கடைக்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் பட்டாசுகளை வாங்கியுள்ளனர்.
அதற்குரிய பணம் கேட்ட சரவணனை மிரட்டிய வாலிபர்கள், கடையிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை அள்ளிக் கொண்டு சென்று விட்டனர்.அதிர்ச்சியடைந்த சரவணன் இது குறித்து வடக்கு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, இதில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த, அரவிந்த், 24, மனோஜ், 28, முகமது தவ்பீக், 30, பஞ்சதாசன், 20, சதீஷ்குமார், 28, சந்தோஷ்குமார், 24 மற்றும் லட்சுமி நாராயணன், 21 ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.