ADDED : பிப் 22, 2026 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காங்கயம் - திருப்பூர் ரோடு புளிக்கல் மேட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி, 56; காய்கறி வியாபாரி. மனைவியை பிரிந்து, மகள் சோபிகா, 19, உடன் வசித்துவந்தார். மகள், அரசு கல்லுாரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை அறை மேற்கூரையில் சோபிகா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை ஊதியூர் வடுகபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி, 45. கடந்த, பத்து ஆண்டுக்கு முன் கணவர் இறந்து விட்டார். ஒரு ஆண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

