போதை மாத்திரை விற்றவர்கள் சிக்கினர்
திருநெல்வேலி மாவட்டம், மேலத்தெருவை சேர்ந்தவர் ஜோசப், 21; அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் யூசுப் முஹமது ஹாஜி, 20. இருவரும், பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையத்தில் வசிக்கின்றனர். போதை மாத்திரை விற்றதாக இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 10 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
காங்கயம், ஊதியூர், வடசின்னாரிபாளையத்தில் சாராயம் காய்ச்சுவதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு ரோந்து மேற்கொண்டு, அமராவதிபாளையத்தில் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, ராஜமணி, 42, மோகன்குமார், 36 ஆகியோரை கைது செய்து, 2 லிட்டர் சாராயம், 17 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.
டூவீலர்கள் மோதல்; செக்யூரிட்டி பலி
பருவாயைச் சேர்ந்தவர் சண்முகராஜன், 50; தனியார் நிறுவன செக்யூரிட்டி. வேலை முடிந்து காரணம்பேட்டையில் இருந்து பருவாய் நோக்கி டூவீலரில் சென்றார். பருவாய் குட்டை அருகே பின்னால் வந்த டூ வீலர் மோதியதில் பலியானார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.