கஞ்சா சாக்லெட் பறிமுதல்
திருப்பூர் வடக்கு போலீசார், கொங்கு மெயின் ரோடு பகுதியில்பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவரிடம் 350 கிராம் எடையில் கஞ்சா கலந்த80 சாக்லெட்கள் இருந்தன. அவர் ஒடிஷாவைச் சேர்ந்த மதன்ஜெனா, 25; திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்ததும், கஞ்சா சாக்லெட்டை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது. அவரைக் கைது செய்த போலீசார், கஞ்சா சாக்லெட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
2.800 கிலோ குட்கா சிக்கியது
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜன்குமார், 25 என்பவர் குட்கா விற்றுக்கொண்டிருந்தார். வடக்கு போலீசார் அவரை கைது செய்து, 2 கிலோ 800 கிராம் எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டிலுடன் 3 பேர் கைது
நல்லுார் பிரிவு டாஸ்மாக் மதுக்கடை அருகே கார்த்திகேயன், 34, குருந்தையா, 23, சேவகப் பெருமாள், 46 ஆகியோர் மதுபாட்டில்களை விற்றுகொண்டிருந்தனர். அவர்களை நல்லுார் போலீசார் கைது செய்து, 51 மது பாட்டில்கள், 6 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.