/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பண்ணை வீட்டில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்
/
பண்ணை வீட்டில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்
பண்ணை வீட்டில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்
பண்ணை வீட்டில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்
ADDED : டிச 18, 2024 11:09 PM
திருப்பூர்; பல்லடத்தில் நடந்த மூன்று பேர் படுகொலை சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் தோட்டத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு மேற்கொள்ள போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்லடம், சேமலைகவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
அவ்வப்போது, புறநகரில் தனியாக வசிக்கும் முதிய தம்பதி, தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலை எதிரொலியாக, குற்றங்களை தடுக்கும் வகையில், துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில் டி.எஸ்.பி., தலைமையில் கிராம, புறநகர் வீடுகளில் தனியாக வசிக்கும் நபர்களை அழைத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காங்கயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில் நாச்சிமுத்து மஹாலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொதுமக்கள்பங்கேற்றனர்.
அதில், தோட்டத்து வீடுகள், தனியாக குடியிருக்கும் வயதான பெரியவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் 'சிசிடிவி' கேமரா மற்றும் சைரன்களை பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் நாய்கள் சத்தம் கேட்டாலோ அல்லது கதவை தட்டினாலோ கதவை திறக்க கூடாது.
உடனடியாக பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.