/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலுக்கு முன் போலீஸ் மாற்றம்
/
தேர்தலுக்கு முன் போலீஸ் மாற்றம்
ADDED : டிச 26, 2025 06:22 AM
திருப்பூர்: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், மூன்று ஆண்டுகளுக்கு மேல், மாநகர், புறநகரில் பணியாற்றும் எஸ்.ஐ. வரையிலான போலீசாரை இடமாற்றம் செய்யும் வகையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இதற்கு முந்தைய நடவடிக்கையாக காவல்துறையில், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றும் எஸ்.ஐ., வரையிலானோரை இடமாற்றம் செய்வதுவழக்கம்.
திருப்பூர் மாநகர மற்றும் புறநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மூன்று ஆண்டுகளை கடந்து பணியாற்று பவர்கள், சொந்த மாவட்டத்தில், சட்டசபை தொகுதி மற்றும் கடந்த முறை பணியாற்றிய தொகுதியில், பணிபுரி வோர் உள்ளிட் டோர் மாற்றப் படுவர்.
அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.ஐ. மற்றும் போலீசாரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முழுமையாக சேகரிக்கப்பட்ட பின், அடுத்த மாதம் இடமாற்றத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
பணிகள் விரைவு முழுமையாக பட்டியல் தயார் செய்த பின், தேர்தல் விதிமுறைகளுக்கேற்ப வெளி மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவர். மாநகரில் இதற்கான பணிகள் விரைந்து நடக்கிறது. மாவட்ட போலீசாரை பொறுத்த வரை, சமீபத்தில் எஸ்.ஐ. உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்ட காரணத்தால், சொற்ப எண்ணிக்கையிலான போலீசார் மட்டும் இடமாற்றம் செய்யப்படுவர். இரு நாட்கள், முதல் கட்டமாக, மாநகரில், ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இரண்டாம் கட்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம், இடமாற்றம் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிடும். - போலீஸ் அதிகாரிகள்

