/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளம்பெண்ணிடம் அத்துமீறல்; பல் டாக்டரை தேடும் போலீசார்
/
இளம்பெண்ணிடம் அத்துமீறல்; பல் டாக்டரை தேடும் போலீசார்
இளம்பெண்ணிடம் அத்துமீறல்; பல் டாக்டரை தேடும் போலீசார்
இளம்பெண்ணிடம் அத்துமீறல்; பல் டாக்டரை தேடும் போலீசார்
ADDED : ஜூன் 18, 2025 12:16 AM
திருப்பூர்; திருப்பூரில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரின் பேரில், தலைமறைவான பல் டாக்டர் குறித்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர் - பி.என்., ரோடு, பூலுவபட்டி பிரிவை சேர்ந்தவர், 25 வயது இளம்பெண். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் குமார் நகரில் உள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டாக்டர் அறிவுரைப்படி, இரு வாரத்துக்கு ஒரு முறை இளம்பெண் சென்று வந்தார். நேற்று முன்தினம், இளம்பெண் பல் மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர் ஸ்டீபன், அத்துமீறியதாக தனது பெற்றோரிடம் இளம்பெண் தெரிவித்தார்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவான டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.