sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

/

 போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

 போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

 போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை மக்கள் போராட்டத்தால் பரபரப்பு


ADDED : ஜன 31, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: நிலப்பிரச்னையில், வீட்டை இடித்து, விவசாய தொழிலாளர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, குமரலிங்கம் போலீஸ் ஸ்டேஷனை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மடத்துக்குளம் அருகேயுள்ள ருத்திராபாளையம் பகுதியில், 13.5 ஏக்கர் நிலம் குறித்து இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

நீதிமன்ற வழக்குகளும் நிலுவையிலுள்ள நிலையில், கடந்த, 27ம் தேதி இரவு , ஒரு தரப்பை சேர்ந்த அஸ்வின் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், வாகனங்களில் கும்பலாகச்சென்று, அந்த நிலத்தில் இருந்த வீட்டை இடித்ததோடு, அங்கு தங்கியிந்த விவசாய கூலி தொழிலாளர்களான ரிஜூ, கார்த்திக் ஆகியோரை, நிர்வாணப்படுத்தி, கட்டி வைத்து, தாக்கியுள்ளனர்.

அதிலிருந்து தப்பி வந்தவர் கொடுத்த தகவலின் பேரில், பொதுமக்கள் அக்கும்பலை சுற்றி வளைத்து, 5 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடி அமராவதி ஆற்றில் குதித்த மணிகண்டன், 25, மாயமானார். இது குறித்து, குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டை இடித்ததோடு, அங்கிருந்தவர்களை கட்டி வைத்து தாக்கிய, அஸ்வின் மற்றும் பிரதான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், என வலியுறுத்தி ஒரு தரப்பினர், குமரலிங்கம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

''குற்றவாளிகளை விரைவில் பிடிக்கப்படுவார்கள்'' என போலீசார் சமாதான பேச்சு நடத்தியும், மாலை வரை போராட்டம் தொடர்ந்தது.






      Dinamalar
      Follow us