/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடவடிக்கை எடுக்காத போலீசார்; டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை
/
நடவடிக்கை எடுக்காத போலீசார்; டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை
நடவடிக்கை எடுக்காத போலீசார்; டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை
நடவடிக்கை எடுக்காத போலீசார்; டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 30, 2025 10:38 PM

உடுமலை; உடுமலை அருகே, இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை அருகேயுள்ள சுண்டக்காம்பாளையத்தைச்சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 23.கடந்த, 15 நாட்களுக்கு முன், அக்கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, கடந்த, 22ம் தேதி, 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வீட்டிற்கு சென்று தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணன், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து உடுமலை போலீசில் புகார் தெரிவித்தும், சிறிய பிரிவில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில், ஹரிகிருஷ்ணனை, அக்கும்பல் தாக்கிய வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.