/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசார் இடமாற்றம்: கமிஷனர் அதிரடி
/
போலீசார் இடமாற்றம்: கமிஷனர் அதிரடி
ADDED : பிப் 18, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் மாநகரில், எஸ்.எஸ்.ஐ., உட்பட, 25 போலீசாரை இடமாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போலீசார் உள்ளிட்ட அனைத்து துறையிலும் இடமாற்றம் நடந்து வருகிறது. மாநகர போலீசில் சமீபத்தில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது, மூன்றாண்டுகளை கடந்து ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் எஸ்.எஸ்.ஐ., ஒன்பது பேர், போலீஸ் ஏட்டு, ஆறு பேர் மற்றும் முதல் நிலை போலீசார், எட்டு பேர் என, 23 பேரை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.