/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் வேன் மோதி மின் கம்பம் சேதம் மின் சப்ளை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
/
போலீஸ் வேன் மோதி மின் கம்பம் சேதம் மின் சப்ளை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
போலீஸ் வேன் மோதி மின் கம்பம் சேதம் மின் சப்ளை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
போலீஸ் வேன் மோதி மின் கம்பம் சேதம் மின் சப்ளை பாதிப்பு: பொதுமக்கள் அவதி
ADDED : நவ 02, 2024 11:14 PM

திருப்பூர்: திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே, போலீஸ் வாகனம் மோதி மின் கம்பம் முற்றிலும் சேதமானது. இதனால், தாராபுரம் ரோடு பகுதியில் நேற்று நீண்ட நேரம் மின் சப்ளை பாதிக்கப்பட்டது.
நேற்று மாலை 5:30 மணியளவில், தாராபுரம் ரோட்டில், மாவட்ட ஆயுதப் படைக்குச் சொந்தமான போலீஸ் வேன் ஒன்று வந்தது. ஆயுதப் படையைச் சேர்ந்த டிரைவர் கருப்பசாமி, 34 என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் வேன் திடீரென ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது. இதில் வாகனத்தின் முன்புறம் சேதமானது.
மேலும் மின் கம்பமும் முற்றிலும் சேதமடைந்ததால், மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. வேனை ஓட்டி வந்த டிரைவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் தெற்கு போலீசார் மீட்டனர். நீண்ட நேரம் வரை அப்பகுதியில் மின் சப்ளை வரவில்லை.
மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டனர். அவ்வழியே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனப் போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.
போலீசார் கூறியதாவது:
ஆயுதப்படையை சேர்ந்த கருப்பசாமிக்கு நேற்று உடல்நிலை சரியில்லை. இது குறித்து யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை. நேற்று காலை பணி செய்து விட்டு முகாமுக்கு சென்று விட்டார்.
மீண்டும் அவருக்கு வாகனத்தை எடுத்து கொண்டு வருமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடல்நிலை சரியியல்லாத நிலையிலும் அவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்தார்.
சம்பவ இடத்தில் வரும் போது திடீரென அவருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு வாகனத்தை ஓட்ட முடியாமலும், மற்ற வாகனம் மீது மோதிவிடாமலும் அவர் மின் கம்பத்தில் மோதி வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால், வேறு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.