/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகார் கொடுத்தும் அலைக்கழிக்கும் போலீசார்; வாகனத்தை பறிகொடுத்த தாயும், மகனும் கதறல் சாட்டையை சுழற்றுவாரா போலீஸ் கமிஷனர்?
/
புகார் கொடுத்தும் அலைக்கழிக்கும் போலீசார்; வாகனத்தை பறிகொடுத்த தாயும், மகனும் கதறல் சாட்டையை சுழற்றுவாரா போலீஸ் கமிஷனர்?
புகார் கொடுத்தும் அலைக்கழிக்கும் போலீசார்; வாகனத்தை பறிகொடுத்த தாயும், மகனும் கதறல் சாட்டையை சுழற்றுவாரா போலீஸ் கமிஷனர்?
புகார் கொடுத்தும் அலைக்கழிக்கும் போலீசார்; வாகனத்தை பறிகொடுத்த தாயும், மகனும் கதறல் சாட்டையை சுழற்றுவாரா போலீஸ் கமிஷனர்?
ADDED : ஜன 18, 2024 12:32 AM
அனுப்பர்பாளையம், : வாகனத்தை மீட்டுத்தர புகார் கொடுத்தும், இதுவரை எவ்விதமான நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை என வாகனத்தை பறிகொடுத்தவர்கள் புலம்பி வருகின்றனர்.
திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர், செந்தில்குமார் 42. சரக்கு வேன் வைத்து வாட கைக்கு ஓட்டி வந்தார். இவரது சகோதரர் சங்கர், என்பவர் ஆறு மாதம் முன் அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் அருகில் உள்ள ஒரு பைனான்ஸில், செந்தில்குமாருக்கு சொந்தமான சரக்கு வேனை அடகு வைத்து, 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.
கடன் தொகையை செலுத்தி, வண்டியை திருப்ப சென்ற போது, பைனான்ஸ் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து, செந்தில்குமார் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். ஆனால், நடவடிக்கை இல்லாததால், கமிஷனர் மற்றும் கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர். இதனால், கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதுவரை போலீசார் வாகனத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து, செந்தில்குமார், அவரது தாயார் முத்துலட்சுமி கூறியதாவது:
வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட தயாராக உள்ளோம். இப்பிரச்னை நடந்து ஆறு மாதம் கழித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய வாகனம் ராக்கியாபாளையத்தில் ஒரு ஒர்ஷாப்பில் இருப்பதை அறிந்து போலீசில் தகவல் தெரிவித்தோம்.
வாகனத்தை எடுக்க சென்ற போலீசார் வாக னத்தை மீட்காமல் விட்டுவிட்டனர். 'நாங்கள் சொல்லும் போது ஸ்டேஷனுக்கு வாருங்கள்...' என அனுப்பி விட்டனர். இவ்வாறு, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறோம்.
போலீஸ் கமிஷனரை பார்த்து முறையிடலாம் என அங்கு சென்றால், அங்குள்ள போலீசார் கமிஷனரை பார்க்க விடுவதில்லை. விசாரணைக்காக வெளியூர் சென்றதில் செலவு என இதுவரை, 17 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கி உள்ளனர்.
இதுவரை ஒரு நாள்கூட சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரிக்கவில்லை. அந்நபர் எங்களுக்கு போன் செய்து, 'போலீசில் எனக்கு ஆள் இருக்கின்றனர். ஒன்றும் செய்யமுடியாது,' என மிரட்டுகிறார். நாங்கள் கூலிவேலை செய்து பிழைத்து வருகிறோம். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். கமிஷனர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
கமிஷனரை பார்த்து முறையிடலாம் என்றால், அங்குள்ள போலீசார் எங்களை தடுத்து அனுப்பி விடுகின்றனர். கூலிவேலை செய்து பிழைத்து வரும் எங்களுக்கு கமிஷனர் நடவடிக்கை எடுத்து வாகனத்தை மீட்டுத்தர வேண்டும்