ADDED : ஏப் 20, 2026 04:48 AM
திருப்பூர்:திருப்பூர்
தெற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 289 வாக்குச்சாவடிகளில்,
சுமார் 1.97 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான
தேர்தல் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த
மூன்று நாட்களாக வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி
தீவிரமாக நடைபெற்றது. விடுபட்ட வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு
நாளன்று அந்தந்தச் சாவடிகளில் வழங்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்
வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தி 'ஸ்ட்ராங் ரூமில்'
பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.
அழியாத மை, வாக்காளர்
பட்டியல், எழுதுபொருட்கள், படிவங்கள் மற்றும் உறைகள் உள்ளிட்ட
80-க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நேற்று தயார்
செய்யப்பட்டன. டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற இப்பணிகளைத் தெற்கு
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் நேரில் ஆய்வு செய்தார். இந்தப்
பொருட்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடி தலைமை
அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
