/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளம் அழகுபடுத்தும் பணி; விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
குளம் அழகுபடுத்தும் பணி; விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
குளம் அழகுபடுத்தும் பணி; விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
குளம் அழகுபடுத்தும் பணி; விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 24, 2024 10:11 PM

உடுமலை; உடுமலை வெஞ்சமடை குளம், அழகு படுத்தும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
உடுமலை, பழநி ரோடு வெஞ்சமடை பகுதியில், பி.ஏ.பி., கால்வாய் அருகே, குளம் உள்ளது. இக்குளம் பராமரிப்பு இல்லாமல், கழிவு நீர் தேங்கியும், புதர் மண்டியும் காணப்பட்டது.
இதனை, நகர்ப்புறங்களிலுள்ள நீர் நிலைகள் மீட்கும் திட்டத்தின் கீழ், நகராட்சி சார்பில், 35 லட்சம் ரூபாய் புதுப்பிக்கும் பணி துவங்கியது.
குளத்தை சுற்றிலும், கான்கிரீட் மற்றும் கருங்கற்கள் அடுக்கி கரை அமைத்தல், பூங்கா, நடை பாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.