ADDED : ஜன 11, 2026 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தமிழகத்தின் பாரம்பரிய பொங்கல் விழாவை, அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் நோக்கத்துடன், தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும், பொங்கல் கலை விழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பொங்கல் கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அளவிலான, பொங்கல் கலை விழா, பாண்டியன்ந-கரில், 15, 16ம் தேதி, மாலை, 5:00 முதல், இரவு, 10:00 மணி வரை நடக்க உள்ளது. பரதநாட்டியம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. தமிழ் பண்பாட்டின் அடையாளமாக, பொங்கல் கலைவிழாவை கொண்டாடி மகிழ, பொதுமக்கள் பங்கேற்கலாம்.

