/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சருகான பொங்கல் கரும்பு தொடரும் குழாய் உடைப்பு
/
சருகான பொங்கல் கரும்பு தொடரும் குழாய் உடைப்பு
ADDED : பிப் 10, 2025 11:49 PM

தண்ணீர் வீண்
திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலை சீரமைக்கப்பட வேண்டும்.
- விஜி, கூட்டுறவு நகர்.
n மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. பிரதான குழாய்களை பரிசோதிக்க வேண்டும்.
- சிவக்குமார், மங்கலம் ரோடு.
n காங்கயம் ரோடு, ஆர்.வி.இ., நகர் வடக்கு, 3வது வீதி, மணியகாரன்பாளையம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் மூன்று மாதமாக வீணாகிறது. சாலை சேதமாகியுள்ளது.
- செல்வகுமார், ஆர்.வி.இ., நகர்.
n அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் வெளியே தெரிகிறது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தடுமாறி விழ வாய்ப்புள்ளது.
- நடராஜன், பங்களா ஸ்டாப்.
n ஊத்துக்குளி ரோடு, ஒற்றைக் கண் பாலம் ரயில்வே கேட் எதிரே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- நரேந்திரன், ஊத்துக்குளி ரோடு.
n பெரிய கடை வீதி கார்னர் சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர், 20 நாட்களாக வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- அபுதாகிர், பெரிய கடை வீதி.
ஓடையில் குப்பை
திருப்பூர், 3வது வார்டு, பழனிசாமி நகர், ஓடையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உதயகுமார், பழனிசாமி நகர்.
பலகை சேதம்
மங்கலம் ரோடு, சாமிக் கவுண்டர் வீதியில், மாநகராட்சி அறிவிப்பு பலகை சேதமாகியுள்ளது.
- வின்சென்ட், மங்கலம் ரோடு.
கால்வாய் சேதம்
திருமுருகன்பூண்டி, அண்ணா வீதியில் சாக்கடை கால்வாய் சிலாப் கற்கள் உடைந்து, சேதமாகியுள்ளது. கால்வாயை பராமரிக்க வேண்டும்.
- முருகேசன், அண்ணா வீதி.
நாய்த்தொல்லை
திருப்பூர், 60வது வார்டு, பிள்ளையார் நகரில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- சம்யுக்தா, பிள்ளையார் நகர்.
குப்பைக்குத் தீ
திருப்பூர், 38வது வார்டு, முருகம்பாளையம், சூர்யா நகரில் குப்பை தொட்டி இல்லை. குப்பை கொட்டி தீ வைக்கப்படுகிறது. குப்பை தொட்டி வைத்தால், சுகாதாரம் மேம்படும்.
- நவீன், சூர்யா நகர்.
கால்வாய் அடைப்பு
அனுப்பர்பாளையம், திலகர் நகர் ஐந்தாவது வீதி, ஸ்ரீபொன் மாரியம்மன் கோவில் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- வரதராஜ், திலகர் நகர்.
காய்ந்த கரும்பு
திருப்பூர், 37வது வார்டு, கே.செட்டிபாளையம் ரேஷன் கடை முன் பொங்கல் பரிசுத்தொகுப்பு மீதமாகி, வீசப்பட்ட கரும்புகள் இன்னமும் அப்படியே குப்பையாகவே உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும்.
- பாலு, கே.செட்டிபாளையம்.