/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் கொண்டாட்டம் பாத்திர உற்பத்தி ஜரூர்
/
பொங்கல் கொண்டாட்டம் பாத்திர உற்பத்தி ஜரூர்
ADDED : ஜன 05, 2025 02:21 AM

திருப்பூர்: திருப்பூரில், பொங்கல் பானை உற்பத்தியில் பாத்திர உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம், திலகர்நகர் ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், அனுப்பர்பாளையம்புதுார், 15 வேலம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் மாநிலம் முழுக்க விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பானை ஆர்டர்கள் அதிக அளவில் வரும். இதன் காரணமாக அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பாத்திர பட்டறைகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.