/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டவுன் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா
/
டவுன் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா
ADDED : ஏப் 16, 2025 10:51 PM
திருப்பூர்; திருப்பூர் டவுன் மாரியம்மன் பொங்கல் விழா, பூச்சாட்டுடன் நேற்று துவங்கியுள்ளது. வரும், 20ம் தேதி மகாமுனி பொங்கல், 22ம் தேதி கம்பம் மற்றும் கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வரும் 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு, பட்டத்தரசி அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல், அம்மை அழைத்தல் ஆகியன நடக்கின்றன. பொங்கல் விழாவும், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. வரும், 25ம் தேதி மஞ்சள் நீர் விழாவும், அன்தானமும், சுவாமி திருவீதியுலா நடைபெறும்.
பொங்கல் விழாவை முன்னிட்டு, 21ம் தேதி, சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், 22ல் செல்லாண்டியம்மன், 23ல் வராஹியம்மன், 24ம் தேதி டவுன் மாரியம்மன், 25ம் தேதி மகாலட்சுமி ஆகிய அலங்கார பூஜைகள் நடக்க உள்ளன.
வரும் 24ம் தேதி மாலை, பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சியும், 25ம் தேதி மாலை, வேணி இசைக்குழுவின் இன்னிசையும் நடைபெற உள்ளது. 23ம் தேதி மாலை பக்தர்களின் பூவோடு ஊர்வலமும் நடைபெற உள்ளது.