/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பொங்கல் விழா
/
கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2025 11:38 PM

அவிநாசி; தமிழர் பண்பாடு கலாசார பேரவை அறக்கட்டளை சார்பில் பொங்கல் முப்பெரும் விழா, அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் நடந்தது.
தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்புசாமி, செயலாளர் முருகேசன், அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார்.
பொங்கலிட்ட பின், மகளிர் அணி சார்பில் கும்மியாட்டம் நடந்தது.
தமிழ்ச்சங்கச் செயலாளர் கணேசன், தமிழ்நாடு பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
'நமக்கு நாமே மருத்துவர்' நிகழ்ச்சியில் இளைஞர் அணி தலைவர் முத்துக்குமார் முன்னிலையில், சிறுதானியங்களின் மகத்துவம் குறித்து இயற்கை வாழ்வியல் வல்லுனர் அப்பன் விளக்கினார்.
ராக்கியாபாளையம் கிளை தலைவர் குமாரசாமி, செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீ சக்தி சிலம்பக் கலைக்கூட மாணவர்களின் சிலம்பாட்டம்; அவிநாசி வேட்டுவபாளையம் காராளர் கலைக்குழு சார்பில் தமிழரின் பாரம்பரிய கிராமிய கலையான கம்பத்தாட்டம்;பொருளாளர் ராயப்பன் முன்னிலையில் யோநா குழுவினரின் தந்திரக் கலை நிகழ்ச்சி நடந்தது.
சேவூர் கிளை செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பணி நிறைவு தலைமை ஆசிரியர் பழனிச்சாமி அறிமுக உரையுடன் 'சீர்மிகு தமிழர் நாகரீகம் பண்பாடு அன்றும் இன்றும்' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடைபெற்றது.
பண்ணும் பரதமும் நிகழ்ச்சி செயற்குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் நடந்தது. செயலாளர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.