ADDED : ஜன 11, 2025 09:02 AM

திருப்பூர் : திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகத்தில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது.
வரும், 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கோர்ட் வளாகத்தில் பெண் வக்கீல்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ரங்கோலி போட்டி நடந்தது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முன்னதாக கோர்ட் வளாகத்தின் வாயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர். திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.