/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய்நாடி நோய்முதல் நாடி வாழ்வியலுக்கான பாடம் சொல்லும் பொங்கல் விழா
/
நோய்நாடி நோய்முதல் நாடி வாழ்வியலுக்கான பாடம் சொல்லும் பொங்கல் விழா
நோய்நாடி நோய்முதல் நாடி வாழ்வியலுக்கான பாடம் சொல்லும் பொங்கல் விழா
நோய்நாடி நோய்முதல் நாடி வாழ்வியலுக்கான பாடம் சொல்லும் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2025 11:48 PM
திருப்பூர்; ''தமிழர்களின் பாரம்பரியம், சிறந்த வாழ்வியல் பாடத்தை பயிற்றுவித்திருக்கிறது'' என்கிறார், திருப்பூர் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் முருகநாதன்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழர்களின் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது; இதை உணர்த்துவது தான் பொங்கல் விழா. விழாவில் சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், உறியடி போன்ற பல்வேறு விளையாட்டுகள் இடம் பெறும்; இந்த விளையாட்டுகள் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். ஜல்லிக்கட்டு, என்பது வீரத்தை பறைசாற்றுகிறது. பெண்கள் கும்மியடித்து, கோலமிடுவார்கள்; இது, அவர்களின் கை மற்றும் மூளையை ஒருங்கிணைக்கும் செயல். தினசரி கோலமிடுவதால் மூளை செயல் திறன் நன்றாக இருக்கும். மூளை சார்ந்த பிரச்னை வராது.
கரும்பு உண்பதால், பற்களின் ஈறுகள் வலுப்பெறும் என்பார்கள். பொங்கல் சமயத்தில் தேன், தினை, கைக்குத்தல் அரிசி, கம்மஞ்சோறு, ராகி களி உட்பட சிறுதானிய உணவுகளை அதிகம் உட்கொள்வர்; இவை உடல் நலத்துக்கு உகந்தது. மார்கழி மாத குளிரில் அதிகாலையே எழுந்து, பெண்கள் வாசலில் கோலமிடுவர்; இம்மாதத்தில் பெய்யும் பனி, உடலில் படுவது, நல்லது என்பார்கள். பொதுவாகவே, அதிகாலை எழுவது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதே இதன் பொருள். காணும் பொங்கலன்று உற்றார், உறவினர், நண்பர்கள் என, அனைவரும் ஒன்று கூடி மகிழ்வர்; இது, குடும்ப உறவின் வலிமையை உணர்த்துகிறது.
பொங்கல் விழா என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல. கலாசாரம், உடல் நலன், நல்ல பழக்க வழக்கம் மற்றும் குடும்ப உறவு பேணுவது என்ற சிறந்த பண்புகளுக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.