
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ கருப்பராயன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கடந்த 26ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா துவங்கியது. கடந்த 31ம் தேதி பொட்டு சாமி பொங்கல், 1ம் தேதி விநாயகர் பொங்கல் மற்றும் காமாட்சியம்மன், மாகாளியம்மனுக்கு படைக்கலம், அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. கோவில் விழா குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.