/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டுமான தொழிலாளருக்கு பொங்கல் பரிசு! நலவாரிய தலைவர் சூசக தகவல்
/
கட்டுமான தொழிலாளருக்கு பொங்கல் பரிசு! நலவாரிய தலைவர் சூசக தகவல்
கட்டுமான தொழிலாளருக்கு பொங்கல் பரிசு! நலவாரிய தலைவர் சூசக தகவல்
கட்டுமான தொழிலாளருக்கு பொங்கல் பரிசு! நலவாரிய தலைவர் சூசக தகவல்
ADDED : ஜன 05, 2024 01:31 AM
திருப்பூர்;வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள விதிமுறைகளை எளிமைப்படுத்தி, கட்டுமான தொழிலாளருக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கும் என எதிர்பார்ப்பதாக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசினார்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், பி.என்., ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) நேற்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நலவாரிய தலைவர் ஆலோசனை நடத்தினார்.
குமார் (சி.ஐ.டி.யு.,), மூர்த்தி (ஏ.ஐ.டி.யு.சி.,), ரங்கசாமி (எல்.பி.எப்.,), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.,), முருகன் (எச்.எம்.எஸ்.,), சுகுமார் (அண்ணா தொழிற்சங்கம்), சாலையோர நலவாரிய உறுப்பினர் பெருமாள் உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆய்வுக்கூட்டத்தில் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது:
கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியத்தை, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது.
கட்டுமான தொழிலாளருக்கு வீடு கட்ட, 4 லட்சம் ரூபாய், குணப்படுத்த முடியாத நோய் பாதித்தோருக்கு, மாதம் ஆயிரம் ரூபாய், நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் மருத்துவம், தொழிற்கல்வி படித்தால், முழு செலவினங்களையும் ஏற்றுக்கொள்வதோடு ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
தொழிலாளர் நல வாரிய திட்டங்களை எளிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான தொழிலாளருக்கு வீடு வழங்கும் திட்டத்தில் அரசு ஏராளமான நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனை தளர்த்துவதற்கான முயற்சியில் வாரியம் ஈடுபட்டுள்ளது. பொங்கல் பரிசாக, வீடு வழங்கும் திட்ட நிபந்தனைகளை தளர்த்தி அரசு அறிவித்தால் சிறப்பாக அமையும்.
இவ்வாறு, அவர் பேசினார்.