sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் பொங்கலோ பொங்கல்! களைகட்டியது பண்டிகை விற்பனை

/

பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் பொங்கலோ பொங்கல்! களைகட்டியது பண்டிகை விற்பனை

பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் பொங்கலோ பொங்கல்! களைகட்டியது பண்டிகை விற்பனை

பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் பொங்கலோ பொங்கல்! களைகட்டியது பண்டிகை விற்பனை


ADDED : ஜன 15, 2024 12:08 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை பகுதிகளில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில், பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால், கடை வீதிகள் களை கட்டியது.

உடுமலை பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளதால், உழவர் திருநாள் திருவிழாவான, பொங்கல் திருநாள், கிராமங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்கழி மாதம் முதல், பாரம்பரிய முறையில், மாக்கோலமிட்டு, பிள்ளையார் பிடித்து, பூசணி பூ வைத்து வழிபட்டு வந்தனர்.

ஒரு சில கிராமங்களில், பாரம்பரியமாக, ஊருக்கு பொது காளையாக உள்ள சலகெருதுகளுடன் விளையாட்டு, கும்மியாட்டம் என, உருமி இசையுடன், மார்கழி மாத பனி இரவுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டியது.

மேலும், பெரும்பாலும் கிராமங்களிலுள்ள வீடுகள், தோட்டத்துசாளைகளில், சுண்ணாம்பு அடித்து புதுப்பொலிவு பெற்றுள்ளன. மாடுகள், ரேக்ளா மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் அழகுபடுத்தும் பணிகளும் நடந்தது.

தை மாதம் பிறப்பதற்கு முன்தினம், பழையன கழிதலும், புதியன புகுதலும் என, உற்சாகமாக, தை மகளை வரவேற்கும் விதமாக, வீடுகளில், வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ கொண்டு, காப்பு கட்டப்பட்டு, மாவிலை தோரணங்கள் கட்டியும், வண்ண கோலமிட்டு வரவேற்கும் வகையில், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன், பொங்கல் பண்டிகை துவங்குகிறது.

இதற்காக, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகிய விற்பனை கடைகள், உடுமலையின் பிரதான ரோடுகளில் அமைக்கப்பட்டிருந்தது.

தை முதல் நாள், நாளை உலகிலுள்ள உயிரினங்களில் வாழ்விற்கு ஆதாரமாக உள்ள இயற்கைக்கும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாக்கோலமிட்டு, வாசல்களில் புத்தரிசி, வெல்லம் கொண்டு, பொங்கலிட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அடுத்த நாள், விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளை சிறப்பிக்கும் விதமாக மாட்டு பொங்கலும், மூன்றாவது நாள், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடும் விழாவாகவும், நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பூப்பறிக்கும் நோன்பு, காணும் பொங்கல் விழா நடக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான, பொருட்கள் வாங்க, உடுமலை, ராஜேந்திரா ரோடு, சீனிவாசா வீதி, பஸ் ஸ்டாண்ட், கல்பனா ரோடு என பெரும்பாலான கடைவீதிகளில் பொதுமக்கள் திரண்டனர்.

கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள், பொங்கல் பொருட்கள், காய்கறிகள் மற்றும் புத்தாடைகள் வாங்கவும் திரண்டதால், கடை வீதிகள் களைகட்டியது. புத்தரிசியிட்டு, பொங்கல் கொண்டாட, மண் பானை மற்றும் பித்தளை பானை பானைகள் விற்பனை அமோகமாக நடந்தது.

பாரம்பரிய முறையில், மண் பானை, மண்ணினால் செய்யப்பட்ட அடுப்பு, தட்டு, தேங்காய் தொட்டியால் செய்யப்பட்ட அகப்பை வாங்க கடைகளில் மக்கள் திரண்டனர்.

மேலும், இனிப்பான பண்டிகையாக கொண்டாட, தோகையுடன் கூடிய முழுக்கரும்பு, பொங்கல் பானையில் கட்ட மஞ்சள் கொத்து மற்றும் பூ மாலைகள் வாங்கிச்சென்றனர். கரும்பு ஜோடி, 100 ரூபாய்க்கும், மஞ்சள், ஜோடி, 30 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

வழக்கமாக பொங்கலுக்கு, கரும்பு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 200 டன் வரை விற்பனைக்கு வரும். நடப்பாண்டு, வறட்சி காரணமாக, வரத்து பெருமளவு குறைந்து, 70 டன் மட்டுமே வந்துள்ளது. இதனால், கரும்பு விலை உயர்ந்துள்ளது.

அதே போல், வாழைத்தார் வரத்தும் குறைந்துள்ளது. பண்டிகை காலத்தில், ஆயிரம் டன் வரை வரத்து காணப்படும் நிலையில், பாதியாக குறைந்துள்ளது. இதனால், வாழைப்பழம் விலையும் அதிகரித்துள்ளது.

மஞ்சள் விலை குறைந்துள்ளது. வண்ணமயமான பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு, வீடுகளில் கோலமிட, பல வண்ண கலர் கோலப்பொடிகளும் விற்பனை அதிகளவு காணப்பட்டது.

மாடுகளுக்கு புதிதாக அணிவிக்க, கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, பிடி கயிறு என கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனையும் அதிகளவு நடந்தது. உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட, தயாராகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us