
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில் நடக்கவுள்ள பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழ் நேற்று வெளியிடப்பட்டது.
திருப்பூரில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நொய்யல் கரையில் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதில், நொய்யல் கரையில் 501 அடுப்புகள் வைத்து, பொங்கல் வைத்தும், கலை நிகழ்ச்சிகள், பொங்கல் சிறப்பு குறித்த சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறவுள்ளன. இந்த விழாவை மாநகராட்சியுடன் இணைந்து ஜீவநதி நொய்யல் சங்கம், நிட்மா மற்றும் தெற்கு ரோட்டரி ஆகிய அமைப்புகள் நடத்தவுள்ளன. இதற்கான அழைப்பிதழ், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் வெளியிட, கமிஷனர் ராமமூர்த்தி பெற்றுக் கொண்டார். விழா குழுவைச் சேர்ந்த ஜீவானந்தம், மோகன் கார்த்திக், நடராஜன், திருப்பதி, மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், முதன்மை பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் உடனிருந்தனர்.