/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் திரை விருந்து; ரசிகர்கள் உற்சாகம்
/
பொங்கல் திரை விருந்து; ரசிகர்கள் உற்சாகம்
ADDED : ஜன 12, 2025 11:38 PM

திருப்பூர்; பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜ ராஜா மற்றும் மெட்ராஸ்காரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:
பொங்கலையொட்டி வந்துள்ள மதகஜராஜா, வணங்கான் படங்கள் நன்றாக உள்ளது.
முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக விட்டாலும், படம் நன்றாக இருந்தால், மக்கள் ரசிப்பார்கள்.
இந்த பொங்கலுக்கு, இரு சிறிய படங்கள் உட்பட ஏழு படங்கள் வருகிறது. இன்றைய டிரெண்டுக்கு, மதகஜராஜா, வணங்கான் உள்ளிட்டவை சிறப்பாக உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
பொங்கல் திரை விருந்தாக அதிக படங்கள் வெளியாகியுள்ளதால், திருப்பூர் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.