ADDED : ஜன 16, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, காமராஜர் நகரில் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து 15ம் ஆண்டு தைத்திருநாள் பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தினர்.
சிறுவர் சிறுமிகளுக்கான ஸ்லோ சைக்கிள், பலுான் உடைத்தல், முறுக்கு கடித்தல், தவளை போட்டி, சாக்குப்போட்டி, மகளிருக்கான மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, பாட்டு போட்டி, கவிதை போட்டி, தம்பதியருக்கான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன. மாலை பூப்பறிக்கும் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கும்மியடித்து பாட்டு பாடினர்.