sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!

/

பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!

பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!

பொங்கல் விழா நடத்துவதில் 'பொங்கிய' பிரச்னை!


UPDATED : ஜன 09, 2024 07:15 AM

ADDED : ஜன 09, 2024 07:14 AM

Google News

UPDATED : ஜன 09, 2024 07:15 AM ADDED : ஜன 09, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் பானை வாங்க திருப்பூர் அனுப்பர்பாளையம் சென்றனர் சித்ராவும், மித்ராவும். நாலு கடை ஏறி இறங்கி, பொங்கல் பானையை வாங்கினர்.

''இவ்ளோ துாரம் வந்துட்டோம்; பக்கத்துல இருக்கற 'மால்'க்கு போய்ட்டு, கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போயிடலாம் மித்து'' என்று சித்ரா சொல்ல, ''ம்...போலாங்க்கா'' என, ஸ்கூட்டரை 'மால்' நோக்கி விரட்டினாள்.

Image 3523228

''வருஷா வருஷம் ஜீவநதி நொய்யல் அமைப்பு, நொய்யல் பண்பாட்டு கழக அமைப்பை சேர்ந்தவங்க, கார்ப்பரேஷனோட சேர்ந்து, பொங்கல் விழா நடத்துறாங்கல்ல. போன வருஷம் நிகழ்ச்சி ஏற்பாடு பண்றப்போ,'நிகழ்ச்சி நடத்த நன்கொடை வசூல் பண்ணணும்னு தோழர்கள் நிறைந்த நொய்யல் பண்பாட்டு கழகத்தை சேர்ந்தவங்க சொல்ல, 'வெளியில இருந்த ஒரு பைசா கூட நன்கொடை வசூல் பண்ணக்கூடாது'ன்னு, ஜீவநதி நொய்யல் அமைப்பைச் சேர்ந்தவங்க சொல்லியிருக்காங்க,''

''இதனால, ரெண்டு அமைப்பை சேர்ந்தவங்களுக்கு சங்கடம். இந்த வருஷம், கார்ப்பரேஷனோட சேர்ந்து, ரெண்டு பேரும் தனித்தனியாக நிகழ்ச்சி நடத்திக்கலாம்ன்னு முடிவு பண்ணி, தனித்தனியா 'நோட்டீஸ்' அச்சடிச்சிட்டாங்க,''

''பொங்கலிலும் அரசியல் புகுந்துடுச்சா...'' சிரித்தாள் சித்ரா.

கணக்கு என்னாச்சு!


''அதே மாதிரிங்க்கா, போன வருஷம் கவர்மென்ட் சார்பில புத்தக கண்காட்சி நடத்த, 17.50 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கியிருக்காங்க. கண்காட்சி நடத்தின இடத்துக்கு வாடகை கிடையாதாம். கார்ப்பரேஷன் சார்பில அந்த இடத்தை சுத்தம் பண்ணியிருக்காங்க; அதுக்கான 'பில்'லையும் போட்டு காசு எடுத்திட்டாங்க...''

''கலை நிகழ்ச்சிகள் எல்லாம், 'ஸ்பார்ன்ஸர்ஸ்' மூலமா நடத்தியிருக்காங்க. அப்படியிருக்க, கவர்மென்ட் ஒதுக்கின, 17.50 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்குன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.

Image 1217378

''கணக்கு கேட்டாலே பிரச்னை தான். ஒரு வேளை, இந்த புத்தக கண்காட்சி நடத்தறதுக்குள்ள, கணக்கு காண்பிப்பாங்களோ, என்னவோ...'' சிரித்தாள் சித்ரா.

மளிகைப் பொருட்களை வாங்கி வெளியே வந்த சித்ராவும், மித்ராவும், அருகேயிருந்த காபி ஷாப்புக்குள் நுழைந்து, ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து, ஸ்நாக்ஸ், காபி 'ஆர்டர்' செய்தனர்.

'நிழல்' கவுன்சிலர்


''கார்ப்பரேஷன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகம் வருது மித்து,'' என்ற சித்ரா தொடர்ந்தாள்.

''அரை சதம் எண் கொண்ட வார்டோட லேடி கவுன்சிலர், கோவையிலயே இருக்காங்களாம். அங்கதான் அவங்க வேலையும் பார்க்கிறதா சொல்றாங்க. அவரோட அப்பா தான், வார்டுக்குள்ல, 'நிழல் கவுன்சிலர்' மாதிரி, வார்டு வேலைகளை கவனிச்சுட்டு இருக்காராம்,''

''போன வாரம், ஒரு நாள் நைட் நேரத்துல, அவரோட வீட்டு பக்கம் கட்டுமான வேலைக்கு மண் எடுத்துட்டு வந்த டிப்பர் லாரி, மின் கம்பத்துல உரசினதுல, மின்கம்பி அறுந்துடுச்சாம். இ.பி.,க்காரங்க உடனே மின் இணைப்பை துண்டிச்சு, விபரீதம் எதுவும் நடக்காத மாதிரி பார்த்துக்கிட்டாங்களாம்,''

''இருந்தாலும், 'ஆக்டிங்' கவுன்சிலரு, இ.பி.,காரங்களை கூப்பிட்டு, 'உடனடியா மின் கம்பியை மாத்திக் கொடுக்கணும்'னு சொல்லி கட்டாயப்படுத்தினாராம். இந்த நேரத்துல, ஒட்டுமொத்தமா இ.பி., லைனை 'ஆப்' பண்ணி, கம்பி மாத்தினா, மக்கள் பிரச்னை பண்ணுவாங்க. காலையில வந்து மாத்தி கொடுத்துடறோம்' இ.பி., காரங்க சொல்லியும், அவருவிடாம 'டார்ச்சர்' பண்ணிட்டே இருந்தாராம்'' என்றாள் சித்ரா.

'கடிக்கும்' முகாம்!


''மக்களுடன் முதல்வர்' திட்டத்துல நிறைய பேரு மனு தர்றாங்களாமே...'' என பேச்சை மாற்றிய மித்ரா, ''போன ஆட்சியிலேயும் இதே மாதிரி தான், 'அம்மா முகாம்'ங்கற பேர்ல முகாம் நடத்தினாங்க. இந்த மாதிரி மனு வாங்க முகாம்ங்க நடத்தறதுக்குன்னு, ஸ்பெஷலா நிதி ஒதுக்கீடு எதுவும் கவர்ன்மென்ட் சைட்ல இருந்து தர்றது இல்லையாம்,''

''முகாம் நடத்த மண்டபம் ஏற்பாடு பண்றதுல்ல இருந்து, முகாம் நடத்த வர்ற அதிகாரிகளுக்கு சாப்பாடு செலவுன்னு, 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகுதாம். இந்த செலவை, அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் தான் ஏற்க வேண்டியிருக்காம். இதனால, முகாம்ங்ற பேச்சை கேட்டாலே ஓடி ஒளிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படறாங்களாம்..'' என்றாள் மித்ரா.

''உள்ளாட்சின்னு சொல்லவும் தான், ஞாபகம் வருது மித்து. பஞ்சாயத்துகள்ல, தனிமனை அங்கீகாரம் வாங்கறதுக்குள்ள போதும்போதும்ன்னு ஆகிடுதாம். அங்கீகாரம் வாங்க, அதுக்கான 'அமவுன்டை' ஆன்லைனில் கட்டி, விண்ணப்பிச்சதுக்கு அப்புறம், அந்தந்த பி.டி.ஓ., ஆபீசில் விண்ணப்பத்தை கொடுக்கணுமாம்,''

''அங்க என்னடான்னா, விண்ணப்பத்தை கிடப்பில போட்டு வைச்சிடறாங்களாம். காரணம் கேட்டா, வேலை பளுன்னு சொல்றாங்களாம். ஆனா, 'கவனிக்க' வேண்டிய விதத்துல கவனிச்சா, உடனே வேலை முடியுதாம்'' என்றாள் சித்ரா.

''இந்த மாதிரி கமிஷன், கரெப்ஷன் இருக்க கூடாதுங்கறதுக்காக தான், 'ஆன்லைன்' சிஸ்டமே கொண்டு வந்தாங்க. அப்படியிருந்தும், இப்படி பண்ணா என்ன தான் பண்றது'' என சலித்துக் கொண்ட மித்ரா, ''நானும் பி.டி.ஓ., ஆபிஸ் விவகாரம் ஒன்னு சொல்றேன். மண்டலத்துக்கு ஒரு உதவி நிர்வாக பொறியாளர் இருக்காங்க. அவங்க 'இன்ஸ்பெக்ஷன்' போறதுக்கு ஜீப் கொடுத்திருக்காங்க. ஜீப் ஓட்ற டிரைவருங்க சில பேரு, அவங்க வீட்ல கொண்டு போய் நிறுத்திட்டு, சொந்த 'யூஸ்'க்கு பயன்படுத்தறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

பள்ளியிலும் 'கோஷ்டி'


''இதையெல்லாம் யாரு கண்டுக்கப்போறாங்க மித்து'' சலித்துக் கொண்ட சித்ரா. ''ஸ்கூல்ல நடக்கிற நிகழ்ச்சியில கூட இப்படியெல்லாம் அரசியல் பண்ணா, எப்படிதான் கட்சி வளருமோ'' என பேச்சை மாற்றினாள்.

''20 நாள் முன்னாடி, வேலம்பாளையத்துல இருக்கற கவர்ன்மென்ட் ஸ்கூல்ல, பசங்களுக்கு இலவச சைக்கிள் தர்ற நிகழ்ச்சி நடத்தியிருக்காங்க. இதுல, லோக்கல் மினிஸ்டரு கலந்துக்கிட்டு, சைக்கிள் கொடுத்திருக்காரு. இந்த நிகழ்ச்சியில், கட்சியோட 'மாவட்ட' பொறுப்புல இருக்கற வி.ஐ.பி.,க்கு அழைப்பு கொடுக்கலையாம்,''

''தொகுதி வேணும்னா வேறயா இருக்கலாம் ஆனால், கட்சிக்கு அவரு தானே முக்கிய நிர்வாகி. அவரை புறக்கணிக்கிறது தப்பு தானே; அவரோட 'செல்வா'க்கை குறைக்க, சொந்த கட்சிக்காரங்களே இப்டி பண்றாங்களேன்னு, கட்சி வி.ஐ.பி.,யோட விசிறிகள் புலம்பறாங்களாம்,''

''இந்த நிகழ்ச்சி நடத்தறதுக்கு முன்னாடி, அங்கேரிபாளையம் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல, அந்த கட்சி வி.ஐ.பி., சைக்கிள் கொடுக்கிற நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, சைக்கிள் கொடுத்திருக்காரு. இதுல லோக்கல் மினிஸ்டரு கலந்துக்கிலையாம். இப்படி ரெண்டு பேருக்குள்ல நடக்குற 'ஈகோ வாரில்',ல கட்சிதான் வீணாப்போக போகுது,'' என்றாள் சித்ரா.

''கோஷ்டி பூசல்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகம் வருது. கார்ப்பரேஷன் மேயர் அச்சடிச்ச புத்தாண்டு காலண்டர்ல, உதயநிதி போட்டோ இல்லைன்னு சொல்லி, சிலர் அரசியல் பண்ணதா பேசினோம்ல. இதுல என்ன ஒரு கேலி கூத்துன்னா, அந்த காலண்டர்ல மினிஸ்டர் படம் இருந்துச்சாம்; அந்த படத்தை மறைச்சு 'மார்பிங்' பண்ணி, சோஷியல் மீடியாவுல பரப்பி விட்டுட்டாங்கன்னு, கார்ப்பரேஷன் வி.ஐ.பி., தரப்புல இருக்கறவங்க சொல்லியிருக்காங்க'' என்றாள் மித்ரா.

அரசியல் 'பார்'


''இவ்வளவு, சின்னப்பிள்ளைத்தனமாவா அரசியல் பண்ணுவாங்க...? என, கடுப்பான சித்ரா, ''இதாச்சும் பரவாயில்ல; அவிநாசியில இருக்கற ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிங்களுக்குள்ள, 'பார்' வசூல் பண்றதுல, மல்லுக்கட்டு நடக்குதாம். கட்சியில இருக்கற சில லோக்கல் வி.ஐ.பி.,ங்க ஒட்டு மொத்த 'பார்' வசூலையும், அவங்க 'கன்ட்ரோல்'க்கு கொண்டு வர, நகர, ஒன்றியத்தை கவனிக்கிறவங்களுக்கு வருமானம் இல்லாம போச்சாம்,''

''அதுமட்டுமில்லாம, அவிநாசியில இருந்து தாராபுரம் போய், அங்க இருக்கற 'பார்' வசூலையும் அள்ளிக்குவிக்க 'ட்ரை' பண்றாங்களாம்; இத தெரிஞ்சுக்கிட்ட அங்க இருக்கற நிர்வாகிங்க, 'ஏரியா விட்டு ஏரியா வந்து, இப்படி பண்ணலாமா?'ன்னு சொல்லி பிரச்னை பண்ணியிருக்காங்க,''

''ஆளுங்கட்சிக்குள்ள 'பார்' வசூல் பங்கீடு பிரச்னைதான் பிரதான பிரச்னையா இருக்கிறதால, பேசி ஒரு முடிவுக்கு வர்றதுக்காக, மண்டபத்துல ஒரு கூட்டம் போட்டிருக்காங்கன்னா பார்த்துக்கோ. அந்த கூட்டத்திலும் மாவட்ட பொறுப்பிலுள்ள 'தகப்பன் சாமி'கிட்ட சண்டைக்கு போயிட்டாங்களாம்...''

''இதுல இன்னொரு கூத்து என்னன்னா... 'பார்'களை வளைக்க ஆரம்பிச்ச திடீர் கூட்டணியில, எதிர்க்கட்சி பிரமுகரான 'தங்க'மானவர் தான் முக்கியமான நபராம். அவர் தான், ஐடியாவும், பணமும் கொடுத்து, வேல செய்றாராம். ம்ம்ம்... என்னத்த சொல்ல'' என அங்கலாய்த்தாள் சித்ரா.

''என்னக்கா அதே அவிநாசியில பெரிய போலீஸ் ஆபீசரோட ஜீப் டிரைவரு, ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாராமே...'' என்றாள் மித்ரா.

''ஆமா மித்து. பெரிய ஆபீசர், ஒரு சரக்கு ஆட்டோவை கொண்டு போய், விருதுநகர் டிஸ்ட்டிரிக்லுள்ள வீட்ல விட்டு வர்றதுக்காக அனுப்பி வைச்சாராம். ஆட்டோ புதுசா? யாருக்குன்னு வாங்கினது? டியூட்டில போனாரான்னு விசாரணை போகுதாம்,'' என்றாள் சித்ரா.

''மாவட்ட வாரியா மத்திய அரசாங்கத்தோட சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் சார்ந்த துறை மூலமாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தறாங்க. இதுல, சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்டவங்க கலந்துக்கிட்டு, நிறைய தகவல்களை சொல்றாங்களாம். போன வாரம் திருப்பூர் நஞ்சப்பா ஸ்கூல்ல நிகழ்ச்சி நடத்தியிருக்காங்க. ஆனா, யாருக்குமே தகவல் சொல்லலையாம்...'' என்றாள் சித்ரா.

''எல்லாம் கணக்கு காண்பிக்க நடத்தறது தானே...'' என்ற மித்ரா, ''சரிங்க அக்கா கிளம்பலாம்; மழை வர்ற மாதிரி இருக்கு'' என சொல்ல, இருவரும் புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us